திமுக செய்தித் தொடர்பாளரான கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அரசின் நீர் வளத்துறையின் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் சமீபத்தில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘நதி நீர் இணைப்பு குறித்து மத்திய அரசு அக்கறையுடன் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்காக மத்திய நீர் வளத் துறையின் தலைமை ஆலோசகர் பி.என்.நவலவாலா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, நதிகள் இணைப்பு திட்டத்துக்காக 13 முறை கூடியிருக்கிறது. கேன் - பத்வா நதி நீர் இணைப்பு, தாமன்கங்கா - பின்ஜால் நதி நீர் இணைப்பு மற்றும் பர் - தபி - நர்மதா நதி நீர் இணைப்பு ஆகிய திட்டங்களுக்கான பணிகள் நடந்துவருகின்றன. நாட்டின் உள்ளூர் நதிகளை இணைக்கும் விஷயத்துக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்துவருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நதி நீர் இணைப்பு உண்மையில் சாத்தியமா? பயன் தருமா ? இதோ விவாதிப்போம்!
CREDITS
Host - Kalai Selvan | Camera - Hari Haran, Dinakaran | Edit - Lenin P
Comments
Post a Comment